பெண்ணின் ஆதங்கம்.... எங்களுக்கு இலவச பேருந்தே வேண்டாம்! இது மட்டும் செய்து குடுங்க.... முதல்வர் விஜய்க்கு பெண் வைத்த வேண்டுகோள்! வைரலாகும் வீடியோ....!!!
சிவகாசி அருகே கோணம்பட்டி கிராம மக்களின் பேருந்து வசதி பிரச்சினையை வெளிப்படுத்திய பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோணம்பட்டி கிராம மக்களின் போக்குவரத்து அவதி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பேருந்து வசதி சரியாக இல்லாததால் மக்கள் சந்திக்கும் சிரமங்களை வெளிப்படுத்திய கிராமப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, “இலவச பேருந்து வேண்டாம்... முறையான பேருந்து வசதி வேண்டும்” என்ற அவரது கோரிக்கை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
1 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த அவதி
கோணம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றபடி வீடியோ பதிவு செய்த அந்தப் பெண், தாங்கள் சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்களாக காத்திருந்தும் ஒரு பேருந்து கூட வரவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஊரிலிருந்து பேருந்து நிறுத்தம் வருவதற்கே சுமார் 2 கிலோமீட்டர் நடந்து வர வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
“யாராவது அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தால் என்ன செய்வார்கள்?” என்று கேள்வி எழுப்பிய அவர், தினமும் இதே பிரச்சினையை சந்தித்து வருவதாக தெரிவித்தார். இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தீபாவளி சரவெடி! தாத்தாவின் லுங்கிக்குள் புகுந்து வெடித்த ராக்கெட் பட்டாசு! சிரிக்கிறது... பாவப்படுறதா! வைரல் வீடியோ....
“இலவசப் பேருந்து வேண்டாம்... நேரத்திற்கு பஸ் வேண்டும்”
அரசிடம் தனது கோரிக்கையை பதிவு செய்த அந்தப் பெண், “எங்களுக்கு இலவசப் பேருந்து தேவையில்லை. 30 நிமிடத்திற்கு ஒருமுறை அல்லது 45 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து வசதி கிடைத்தாலே போதும்” என்று கூறியுள்ளார்.
மேலும், தனியார் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாகவும், அரசுப் பேருந்துகளும் குறைவாக இயக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் வேலைக்குச் செல்லும் மக்கள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் அதிக பாதிப்பை சந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
கோணம்பட்டி பெண்ணின் இந்த ஆதங்க வீடியோ தற்போது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தவெக தொண்டர்கள் உட்பட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, கிராமப்புற பகுதிகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.