×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி.. அரசுக்கு சொந்தமான கல்குவாரி பள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலம்.. போலீஸ் விசாரணை..!

அதிர்ச்சி.. அரசுக்கு சொந்தமான கல்குவாரி பள்ளத்தில் கிடந்த இளைஞரின் சடலம்.. போலீஸ் விசாரணை..!

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசஹல்லி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் கல்குவாரி பள்ளத்தில் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கல்குவாரி பள்ளத்தில் இறந்து கிடந்தது முத்துமணி என்பது தெரியவந்தது. மேலும் அவர் சம்பவத்தன்று தனது நண்பர்கள் இரண்டு பேருடன் மது அருந்துவதற்காக அப்பகுதிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் முத்துமணி மது போதையில் கல்குவாரி பள்ளத்தில் தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kalquari pit #Young man body #Found #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story