×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Coimbatore News: ஸ்டெப்ளரை கைக்குள் வைத்து தைத்த மருத்துவர்.. வலியுடன் கண்ணீர் குமுறல்.!

Stapler Found Inside Patient’s Hand: திருப்பூர் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த சரத் பாபுவின் கைகளில் ஸ்டேப்ளர் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement

நோயாளியின் கைக்குள் ஸ்டேப்ளர் வைத்து தைத்ததாக புகார் எழுந்துள்ளது. 

விபத்தில் சிக்கினார்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் வசித்து வருபவர் சரத் பாபு (வயது 42). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2023 ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் காங்கேயம் பகுதியில் சென்றபோது, தவறி விழுந்து காயம் அடைந்தார். இதனால் அவரின் வலது கையில் காயம் & எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கியவருக்கு இப்படி ஒரு நிலையா?.. பிளேடோடு தைத்து அனுப்பிய அரசு மருத்துவர்கள்.. வலியால் துடித்த இளைஞர்.!

வலியால் அவதி: 

அறுவை சிகிச்சைக்கு பின்னர் வீட்டுக்கு திரும்பிய சரத் பாபு, அதிக வலியால் அவதிப்பட்டார். இதனையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றபோது, வலது கையில் ஸ்டேப்ளர் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அறுவை சிகிச்சை செய்து அதனை வெளியே எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். 

ஆட்சியருக்கு கோரிக்கை:

இதனால் அதிர்ச்சியடைந்தவர் மீண்டும் கோவை மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது உரிய பதில் இல்லை. கோவை அரசு மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக ஸ்டெப்ளரை வைத்து சிகிச்சை செய்தது இதன் வாயிலாக உறுதியாகியுள்ளது. தனக்கு உரிய நீதி பெற்றுத்தர வேண்டும், ஸ்டெப்ளரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத் பாபு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அறுவை சிகிச்சை செய்தபோது ஒருவரின் கையில் ஸ்டெப்ளரை வைத்து தையல் போடப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: செய்வினை எடுக்க சுடுகாட்டில் பூஜை.. பெண்கள் தான் டார்கெட்.. குடுகுடுப்புகாரர் பகீர் செயல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Surgical Stapler #கோவை #மருத்துவர் #நோயாளி #அரசு மருத்துவமனை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story