×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கலைஞரின் உண்மை, உழைப்பு, விசுவாசம், அர்ப்பணிப்பின் அடையாளம் சண்முகநாதன் காலமானார்...!! சோகத்தில் மூழ்கிய திமுகவினர்

கலைஞரின் உண்மை, உழைப்பு, விசுவாசம், அர்ப்பணிப்பின் அடையாளம் சண்முகநாதன் காலமானார்...!! சோகத்தில் மூழ்கிய திமுகவினர்

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளாராக இருந்த கோ.சண்முகநாதன்(வயது 80) காலமானார். 

கோ.சண்முகநாதன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நேர்முக  உதவியாளராக இருந்தார். கருணாநிதியின் நிழல் என்றே அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்ட சண்முகநாதன்,  1967 ஆம் ஆண்டு முதல் கருணாநிதியின் கடைசிக்காலம் வரை உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானர். சற்றும் யோசிக்காமல் சமயோசிதமாக வார்த்தை ஜாலம் விடுக்கும் தலைவரின் ஞானஜாலம் என்றே சண்முகநாதன் அவர்களை திமுகவினர் புகழ்வார்கள். கோ.சண்முகநாதன் மறைவிற்கு திமுகவினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shanmuganathan #dmk #kalaingar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story