மு.க.ஸ்டாலின் காமெடி நடிகராக மாறிவருகிறார்!! அமைச்சர் செலூர் ராஜு!!
sellur raju talk about mk stalin

மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசு மருத்துவமனை சார்பில்ரூ1.50 கோடி மதிப்பீட்டில் 40 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர்களை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் கருத்துகள் பேசலாம். ஆனால், கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. கூட்டணி குறித்து தலைமை தான் முடிவெடுக்கும்.
மத்திய அரசின் பட்ஜெட் என்னுடைய பார்வையில் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும், தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறினார்.