கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
school and colleges leave for rain

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளநிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி அருகே அரபிக்கடலில் ஏற்கனவே கியார் புயல் மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது அரபிக் கடலில் உருவான புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மழை காரணமாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதில் சிரமம் இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மற்றும் ஆடலூர், பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நீலகிரியில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா என நான்கு தாலுகாவில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.