உன்னோட ஆபாச வீடியோ என்கிட்ட இருக்கு... இளம்பெண்ணுக்கு செல்போனில் மிரட்டிய மர்ம நபர் ! வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவனுக்கு காத்திருத்த அதிர்ச்சி!!!
சென்னை சாலிகிராமத்தில் ஆபாச வீடியோ இருப்பதாக மர்ம நபர் மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தூக்கிட்டு உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சாலிகிராமத்தில் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் மிரட்டியதால் பெண் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தார். கணவரிடம் மிரட்டல் குறித்து தெரிவித்த நிலையில், இந்த துயர முடிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டல்
சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ரவிச்சந்திரனின் மனைவி ரட்சிதா. சமீபத்தில் அவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தன்னிடம் ரட்சிதாவின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறியுள்ளார். அந்த வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பிவிடப் போவதாகவும் கூறி மிரட்டியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: காதலியின் இறப்பு செய்திகேட்ட அடுத்த நொடியே விபரீத முடிவெடுத்த காதலன்.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
இதனால் அதிர்ச்சியடைந்த ரட்சிதா, நடந்ததை கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் மனைவிக்கு ஆறுதல் கூறியபோதும், மிரட்டலால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலில் இருந்து அவர் மீள முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது.
இரவில் வீடு திறக்காததால் அதிர்ச்சி
வேலைக்குச் சென்றிருந்த ரவிச்சந்திரன், இரவு நேரத்தில் மனைவியை செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், ரட்சிதா அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
மர்ம நபரை தேடும் போலீசார்
தகவலறிந்த விருகம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரட்சிதாவை செல்போனில் தொடர்புகொண்டு ஆபாச வீடியோ மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரது செல்போன் தொடர்புகள் உள்ளிட்ட விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: கர்நாடகா- விலிருந்து வினாடிக்கு 9,000 கனஅடி நீர் தமிழகத்திற்கு திறப்பு...! காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு...!!!