×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பந்து வீச கையை தூக்கிய அடுத்த நொடி நடந்த விபரீதம்! கிரிக்கெட் மைதானத்திலே சுருண்டு விழுந்த வாலிபர்.... அதிர்ச்சி சம்பவம்!!!

விழுப்புரம் சாலாமேட்டில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய அஜிஸ்கான் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 40 வயது அஜிஸ்கான் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பந்துவீசும்போது திடீர் நெஞ்சுவலி

சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஜிஸ்கான் (40). இன்று காலை தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். போட்டி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த நிலையில், அஜிஸ்கான் பந்துவீசச் சென்றபோது திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: காதல் திருமணத்தில் வந்த கசப்பு.. கள்ளக்காதல் வயப்பட்டு விபரீதம்.. விசிக பிரமுகர் கொலை வழக்கில் பகீர் தகவல் அம்பலம்.! 

வலி தாங்க முடியாமல் நிலைகுலைந்த அவர், சக வீரர்கள் கண்முன்னே மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நண்பர்கள்

உடனடியாக அஜிஸ்கானை மீட்ட நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட் மைதானத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நண்பர்களுடன் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தபோதே அஜிஸ்கான் உயிரிழந்தது சாலாமேடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் இந்த மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜிஸ்கான் திடீர் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: சொத்துதகராறில் ஆத்திரமடைந்த அண்ணி சமையலறை சப்பாத்தி கட்டையால்.... கொழுந்தனை ஒரே போடு...! அடுத்து நடந்த அதிர்ச்சி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விழுப்புரம் #Cricket Player Death #சாலாமேடு #Chest pain #அஜிஸ்கான்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story