விபத்தில் இறந்த மனைவி : தற்கொலை செய்து கணவன்... அனாதையாக தவிக்கும் குழந்தைகள்..!
விபத்தில் இறந்த மனைவி : தற்கொலை செய்து கணவன்... அனாதையாக தவிக்கும் குழந்தைகள்..!
விபத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், கோட்டைமேட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சிவக்குமார். இவரின் மனைவி சிவகாமி. தம்பதிகளுக்கு திலீபன், ஹரிஹரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சிவகுமார் கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார்.
மகன்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் சிவக்குமாரின் மனைவி கடந்த மாதம் மேச்சேரி கோவிலுக்கு சென்றுவிட்டு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பிருந்தாவன் திரையரங்கம் அருகே லாரி மீது மோதிய விபத்தில் சிவகாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்து 20 நாட்களை கடந்த நிலையில், மன உளைச்சலால் தவித்துவந்த சிவக்குமார் களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கவே, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஓமலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தம்பதிகளின் குழந்தை ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.