×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்" - திருமணமான 15 நாளில் காதல் கணவன் பகீர் செயல்.. சேலத்தில் அதிர்ச்சி.!

நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் - திருமணமான 15 நாளில் காதல் கணவன் பகீர் செயல்.. சேலத்தில் அதிர்ச்சி.!

Advertisement

 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளைஞர், அதே மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கிடையே நட்பாக பழகிய தொடக்கம், பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. 

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், புதுமண தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால் 23 வயதுடைய இளம்பெண் மீண்டும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். திருமணமான 15 நாட்களில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனிடையே காதல் மனைவிக்கு தொடர்பு கொண்டவர், "உன்னை நான் வாழவிடமாட்டேன். 

நிர்வாணமாக நீ பேசிய வீடியோ அழைப்பை நான் பதிவு செய்து வைத்துள்ளேன். அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன்" என மிரட்டி இருக்கிறார். பதறிப்போன பெண்மணி காதல் கணவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story