"ரவுடியின் கள்ளக்காதலிக்கு லவ் டார்ச்சர்..." 65 வயது முதியவர் அடித்து கொலை.!! 3 பேர் கைது.!!
ரவுடியின் கள்ளக்காதலிக்கு லவ் டார்ச்சர்... 65 வயது முதியவர் அடித்து கொலை.!! 3 பேர் கைது.!!
சேலம் மாவட்டத்தில் ரவுடியின் கள்ளக்காதலிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக 3 நபர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகேயுள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பன். 65 வயதான இவர் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாட்டு கொட்டகையில் படுத்திருந்த செல்லப்பனை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செல்லப்பன் வீட்டின் அருகே வசிக்கும் திருமணமான பெண்ணை விசாரித்த போது ரவுடி பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் முதியவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலமளித்த பெண், தனக்கும் ரவுடி பிரபுவிற்கும் திருமணத்தை மீறிய கள்ள உறவு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த கள்ளத் தொடர்பை பற்றியறிந்த செல்லப்பன், அந்தப் பெண்ணை தன்னுடன் உறவு கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: மது குடிப்பதில் தகராறு... ஏமானாக மாறிய நண்பர்கள்.!! இளைஞர் படுகொலை.!!
இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் பிரபுவிடம் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பிரபு தனது நண்பர்கள் தினேஷ் மற்றும் குமாரவேல் உதவியுடன் முதியவரை அடித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரபு, குமாரவேல் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "என் கூட வரமாட்டியா...." உறவுக்கு அழைத்த கணவன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் வெறி செயல்.!!