×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரோபோ சங்கரின் உடல் இவ்வளவு மோசமடைய அதுதான் காரணம்! தொடர்ந்து அந்த இரண்டும் யூஸ் பண்ணவும்.... பிரபல நடிகர் ஓபன்டாக்...

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் உடல்நலக் குறைவால் காலமானது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அவரது நோய்க்கு காரணம் குறித்து நடிகர் இளவரசு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் தனித்துவமான நகைச்சுவை, பல்திறமை, மற்றும் ரசிகர்களின் அன்பை பெற்ற நடிகர் ரோபோ சங்கர் நேற்று உயிரிழந்தது அனைவரையும் உலுக்கியுள்ளது. வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள், சக கலைஞர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஸ்டாண்ட் அப் காமெடியன் என மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஒட்டுமொத்த  ரசிகர்களின் இதயத்தை வென்றார்.

சினிமாவில் பிரவேசம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய ஷங்கர், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் பிரபல நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். அன்றாட பிஸியான வாழ்க்கையில் சிரிப்பு மறந்த மக்களை தனது காமெடி மூலம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்.

உடல்நலக் குறைவு

இருப்பினும், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதால் அவர் ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கியிருந்தபோதும் உடல் நலக் குறைவு மோசமடைந்து உயிரிழந்தார்.

இதையும் படிங்க: நான் குடிக்காத சரக்கு இல்ல! ஏறாத விமானம் இல்ல! எல்லாமே எக்ஸ்ட்ரீம் போய்டேன்! ரோபோ சங்கரின் வாழ்க்கை பேச்சு...

நோய்க்கான காரணம்

நடிகர் இளவரசு கூறியதாவது, தனது ஆரம்பகால நடன மேடை நிகழ்ச்சிகளில் ஷங்கர் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு பங்கேற்றார். அதை அகற்ற மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டதால் அவரது உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. தொடர்ந்து பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணெய் தொடர்பால் தோள் வலுவிழந்து, அதுவே மஞ்சள் காமாலை நோய்க்கு காரணமாக அமைந்தது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

சினிமா உலகின் புன்னகை முகமாக விளங்கிய ரோபோ ஷங்கரின் மறைவு ரசிகர்களுக்கு பெரும் இழப்பாகும். அவரது சிரிப்பு என்றும் நினைவில் நிலைக்கும்.

 

 

 

இதையும் படிங்க: அப்பா எந்திரி! கமல் சார் வந்துருக்காரு பாரு! ரோபோ ஷங்கர் மகள் அழும் பரிதாப காட்சி......

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ரோபோ ஷங்கர் #tamil cinema #நடிகர் இளவரசு #comedy actor #Kollywood News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story