விவசாயிகளின் பல வருட கனவு நிறைவேற போகிறது! அமைச்சருக்கு நன்றி கூறும் பொதுமக்கள்!
river improvement in pudhukottai.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பல வருடம் கோரிக்கையும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையுமாக, காவிரி படுகையை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பழைய வழித்தடங்களை புதுப்பித்து தருமாறு பலமுறை அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் மாயனூரில் இருந்து( கரூர் மாவட்டம்), திருச்சி மாவட்டம் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி நீர் பாசனம் இல்லாத ஆறுகளில் இணைப்பதற்கு தமிழக அரசு 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணையை பிறப்பிக்க உறுதுணையாக இருந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசிடம் முறையான வழியில் எடுத்துச் சென்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி கூறுகின்றனர்.