திருநங்கை நடுரோட்டில் குத்தி கொலை... முன்பகையால் வாலிபர் வெறி செயல்.!! 5 பேர் கைது.!!
திருநங்கை நடுரோட்டில் குத்தி கொலை... முன்பகையால் வாலிபர் வெறி செயல்.!! 5 பேர் கைது.!!
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் 36 வயதுடைய மகாலட்சுமி என்ற திருநங்கை வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அவரது வீட்டிலிருந்து நாவலூர் பழைய சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த 2 திருநங்கைகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் திடீரென மகாலட்சுமியை கத்தியால் சரமாரியாக தாக்கி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மகாலட்சுமியை அங்கிருந்த நபர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் மகாலட்சுமி என்ற திருநங்கைக்கும் கண்ணகி நகரை சேர்ந்த 30 வயதுடைய பிரகாஷ் என்பவருக்கும் இடையே கடந்த 8 மாத காலமாக பிரச்சனை இருந்துள்ளது. இதனால் பிரகாஷை மரியாதை குறைவாக மகாலட்சுமி பேசியுள்ளார்.
இதில் மகாலட்சுமி மீது கடும் கோபம் கொண்ட பிரகாஷ் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி கண்ணகி நகரைச் சேர்ந்த திருநங்கைகளான சுஜி(35), அபி(30) மற்றும் 2 ஆண்களின் துணையோடு இந்த கொடூரமான செயலை செய்துள்ளார். இதில் மகாலட்சுமியின் கன்னம், உதடு, கழுத்து மற்றும் வலது கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் பயங்கரமாக பிரகாஷ் வெட்டியுள்ளார். போலீசார் விசாரணையை
தீவிரப்படுத்தியுள்ளனர். திருநங்கையை கொலை முயற்சி செய்ய சக திருநங்கைகளே உடந்தையாக இருந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடுரோட்டில் நடந்து சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்.. பொதுமக்கள் உதவி.!
இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை அவிழ்த்து பொது இடத்தில் ஜஸ்டின் செய்த செயல்.! அலறித்துடிக்க ஹாஸ்பிடலில் அனுமதி.!