ஷாக் நியூஷ்! இவுங்களோடு ரேஷன் கார்டுகள் ரத்து.... இனி ரேஷனில் எந்த பொருளும் வாங்க முடியாது! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !!!
ரேஷன் கார்டு பயனாளர்கள் பிப்ரவரி 28க்குள் e-KYC சரிபார்ப்பு அவசியம். தவறினால் பெயர் நீக்கம், சலுகைகள் நிறுத்தம் என அரசு எச்சரிக்கை.
ஏழை மற்றும் எளிய மக்களின் உணவுத் தேவையை உறுதி செய்ய அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களில் முக்கியமானது ரேஷன் கார்டு அடிப்படையிலான பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், தற்போது e-KYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பயனாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
பிப்ரவரி 28க்குள் e-KYC கட்டாயம்
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, தகுதியற்ற பயனாளிகளை கண்டறியவும் போலி கார்டுகளை நீக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
e-KYC என்றால் என்ன?
ரேஷன் கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்கப்படும் நடைமுறையே e-KYC ஆகும். அருகிலுள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரம் மூலம் இந்த சரிபார்ப்பை இலவசமாக செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ரேஷன் அட்டைதாரர்களே....இதை செய்யாவிட்டால் இனி ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது! வெளியான முக்கிய அறிவிப்பு!
சரிபார்ப்பு செய்யாதவர்களுக்கு என்ன ஆகும்?
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சரிபார்ப்பை முடிக்காதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டு பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெயர் நீக்கப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் பிற சலுகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
அரசின் நோக்கம் என்ன?
ஒரே நபர் பல இடங்களில் ரேஷன் பொருட்கள் பெறுவதைத் தடுக்கவும், நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காதவர்களையும் போலி முகவரியில் கார்டு வைத்திருப்பவர்களையும் கண்டறியவும் இந்த நடவடிக்கை அவசியம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில், குறிப்பாக பீகார் போன்ற பகுதிகளில், இந்த காலக்கெடு கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
எனவே, சலுகைகள் தடையின்றி தொடர வேண்டுமெனில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும். கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, பிப்ரவரி 28க்குள் இந்த முக்கிய செயல்முறையை நிறைவு செய்வது பயனாளர்களின் பொறுப்பாகும்.
இதையும் படிங்க: இனி இவர்களுக்குயெல்லாம் ரேஷன் பொருட்கள் கிடையாது! மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் கடுமையான புதிய விதிகள்!