உயிர்போகும் தருவாயிலும் 35 மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்.. ராணிப்பேட்டையில் நெகிழ்ச்சி.!
35 மாணவிகளின் உயிரை காப்பாற்றி ஓட்டுநர் உயிரிழந்தார்.
Ranipet College Bus Driver Dies Heart Attack: கல்லூரி மாணவிகள் பயணித்த பேருந்தின் ஓட்டுநர் ரவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சோகம் ராணிப்பேட்டை சோளிங்கரில் நடந்துள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் அங்குள்ள மகளிர் தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இன்று வழக்கம்போல திருத்தணி, திருவள்ளூர் பகுதிகளில் இருந்து சுமார் 35 மாணவிகளை அழைத்துக்கொண்டு காலை கல்லூரி நோக்கி வாகனத்தை இயக்கி இருக்கிறார்.
மாரடைப்பு மரணம்:
இவர்களின் வாகனம் சோளிங்கர் பகுதியை அடுத்துள்ள ஜம்புக்குளம் அருகே வந்தபோது, திடீரென ரவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தின் வேகத்தை குறைந்தவர், சாலையோர பள்ளத்தில் வாகனத்தை இறக்கி நிறுத்தினார். மேலும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவிகள் நெகிழ்ச்சி:
உயிர் பிரியும் தருவாயிலும் ஓட்டுநர் தங்களின் உயிரை காப்பாற்றியதாக மாணவிகள் கண்ணீருடன் தவித்து நின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.