தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கொட்டி தீர்க்கபோகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
Rain update heavy rain for next two days

சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, வெள்ளை கேட்டு மற்றும் வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் சுமார் கடந்த ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
மேலும் தேனி மற்றும் கம்பம் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாரலுடன் கூடிய கனமழை பெய்தது இதனால் வெப்பத்தின் அளவு குறைந்து அந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்னிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அறிக்கையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான அல்லது கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.