மஹா புயலால் 14 மாவட்டங்களில் கனமழை, 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
rain for cyclone
அரபிக்கடலில் நிலவிய மஹா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கும், 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி அருகே அரபிக்கடலில் 'மஹா' என்ற புயல் உருவாகி உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த புயலால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள மஹா புயல், தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் அந்தமான்பகுதியை நோக்கிச் செல்லும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, சேலம், நீலகிரி, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கும், மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.