×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.! வானிலை மையம் தகவல்..!!

11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.! வானிலை மையம் தகவல்..!!

Advertisement

மிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடல்  பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கிய 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain today #today weather report
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story