தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செந்தில் பாலாஜி வீட்டில் திடீரென போலீசார் அதிரடி சோதனை! என்ன காரணம் தெரியுமா?

raid in senthilbalaji home and office

raid in senthilbalaji home and office Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அக்கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்புகளில் இருந்த அவர், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதனையடுத்து திமுக சார்பாக அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

இந்தநிலையில், போக்குவரத்து துறை அமைச்சராக அவர் முன்பு பதவி வகித்தபோது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது.   

Senthil balaji

அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், சென்னை போலீசார் சிறப்பு அனுமதி பெற்று சென்னையில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு, கரூரில் உள்ள வீடுகள் மற்றும் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அலுவலகத்தில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

சோதனையின்போது வீட்டில் செந்தில் பாலாஜி இல்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பலர் அங்கு திரண்டனர். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Senthil balaji #raid #dmk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story