கொரோனா பரவல்.! இந்த மாவட்டங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க..!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியை ஆய்வு மேற்கொண்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதா

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியை ஆய்வு மேற்கொண்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கொரோனா அத்தொற்று எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்தாலும் மாவட்டவாரியாக கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 18 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் அங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் தினசரி தொற்று 2,000 என்ற அளவில் இருக்கிறது. வார இறுதி நாட்களில் சற்று குறைகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மதம் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சார்ந்த கூட்டங்கள் அதிகமாகக் கூடுவதால் தொற்று அதிகமாகிறது.