×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விளம்பர பேனர்கள் வைத்தால் சிறைதண்டனை! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

punishment for without permision baners

Advertisement


தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் விளம்பர பேனர்கள் வைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும் இது தொடர்பாக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு வந்தது.

இந்நிலையில் விளம்பர பேனர்கள் வைக்க பிறப்பித்திருந்த இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தகர்த்துள்ளது. இதனையடுத்து சென்னை மாநகரில் இந்த விளம்பர பேனர்களை வைக்க சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதில், விளம்பர பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பதாரர், அனுமதி கோரும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட காவல் பேனர்கள் வைக்கப்படும் இடத்திற்கான தடையின்மை சான்று, இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

நடைபாதையின் குறுக்கே பேனர்களை வைக்கக்கூடாது. இருபுற சாலைக்கு நடுவே பேனர்களை வைக்கக்கூடாது. பெங்களுக்கு இடையே குறைந்தது 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பேனர்கள் கீழ் அதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதி எண் இடம்பெற வேண்டும். 

பேனர்கள் வைப்பதற்கான கால அவகாசம் முடிவுற்ற உடன் மக்களுக்கு இடையூறு இன்றி பேனர்களை அகற்ற வேண்டும். விதிகளை மீறினால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் உள்ளிட்ட கட்டுபாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது..
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#banners #chennai managaratchi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story