ஸ்மார்ட்போன் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம்; தங்கை தற்கொலை., காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி.!
ஸ்மார்ட்போன் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம்; தங்கை தற்கொலை., காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி.!

செல்போனுக்காக நடந்த சண்டையில் அண்ணன்-தங்கை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை, மண்டையூர், சோதிராயன்காட்டை பகுதியில் வசித்து வருபவர் சித்திரகுமார். இவரின் மனைவி ஜீவிதா. தம்பதிகளுக்கு 18 வயதுடைய மணிகண்டன் என்ற மகன், 16 வயதுடைய பவித்ரா என்ற மகள் இருக்கின்றனர்.
மணிகண்டன் ஐடிஐ படிப்பு முடித்து, எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். மண்டையூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்த பவித்ரா, எப்போதும் செல்போன் பார்த்து வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: திரைப்பட பாணியில் பயங்கரம்.. கல்லைக்கட்டி கடலுக்குள் வீசி மீனவர் கொலை.!
தற்கொலை செய்து மரணம்
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு நேரத்தில், சுமார் 11 மணியளவில் பவித்ரா செல்போன் பார்த்துள்ளார். இதனால் அவரின் அண்ணன் மணிகண்டன், தங்கையிடம் இருந்து செல்போனை பறித்துள்ளார். தூங்கச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத பவித்ரா அண்ணனிடம் சண்டையிட்டார்.
உச்சகட்ட ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், செல்போனை தரையில் வீசி உடைத்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன பவித்ரா, கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயற்சித்த மணிகண்டனும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை; 27 வயது நபர் போக்ஸோவில் கைது.!