×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனியார் பேருந்து கட்டணம் உயர்வு? விரைவில் உயர்மட்ட குழு கூட்டம்!

தனியார் பேருந்து கட்டணம் உயர்வு? விரைவில் உயர்மட்ட குழு கூட்டம்!

Advertisement

தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக வரும் செப்டம்பர் 17-ம் தேதி உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, தனியார் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தக் கோரி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடுகள்! சிலை கரைப்புக்கும் புதிய விதிமுறைகள்!

இந்த வழக்கு விசாரணையின்போது, தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக ஆலோசனை நடத்த வரும் 17-ம் தேதி உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனியார் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? உயர்த்தப்பட்டால் எவ்வளவு அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்படும்? என்பது குறித்து பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் உயர்மட்ட குழு கூட்டத்திற்குப் பிறகே கட்டண உயர்வு தொடர்பான அடுத்தகட்ட முடிவு தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகும் மழை.. 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Private bus #Private bus spare #tamilnadu #Bus spare
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story