கேள்வி மேல் கேள்வியாய் கேட்டுத்தள்ளிய பிரேமலதா! விஜய் வீட்டுக்கு முகத்தை மூடிட்டு போன அந்த மர்ம நபர் யாரு? ராஜ குரு உங்களுக்கு தான்..... விஜய்யிடம் பிரேமலதா விலாசல்!!!
தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய்யை நோக்கி பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய கேள்விகள் அவையில் பரபரப்பை ஏற்படுத்தின.
தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் சூடுபிடித்த நிலையில், தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய கேள்விகள் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது நெருக்கத்தினரை குறிவைத்து அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் காரணமாக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பட்டினப்பாக்கம் வீடு குறித்து கேள்வி
விவாதத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “முதலமைச்சர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு ரகசியமாகச் சென்ற அந்த மர்ம நபர் யார் என்பதை இந்த பேரவையில் விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த கேள்வி எழுப்பப்பட்டதும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில நிமிடங்கள் அவையில் கூச்சல் நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரத்தன் பண்டிட் நியமனம் மீது தாக்குதல்
அதன்பின் ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவியையும் பிரேமலதா கடுமையாக விமர்சித்தார். “உங்களுக்கு ஜோதிடர் ராஜ குருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு எதற்காக அரசுப் பதவி வழங்கப்பட்டது?” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆரம்பமே அட்டூழியமா.? பழைய அரசியல் பாதை தானா..... 3-வது நாளே சர்ச்சையில் சிக்கிய CM விஜய்! தேசிய அளவில் ட்ரெண்டாகும் #TVKFails ஹாஸ்டேக்..!!!
மேலும், இந்த நியமனத்தை ரத்தன் பண்டிட் விவகாரம் என குறிப்பிட்டு தேமுதிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவையில் அனல் பறந்த விவாதம்
பிரேமலதாவின் பேச்சுக்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசை தட்டியபடி ஆதரவு தெரிவித்தனர். இதனால் சில நேரம் அவை பரபரப்பான சூழலாக மாறியது.
நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.