தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன்; நினைவிடத்தில் வைத்து மனைவி பிரேமலதா மரியாதை.!

நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன்; நினைவிடத்தில் வைத்து மனைவி பிரேமலதா மரியாதை.!

Premalatha placing padmapoosan award in vijayakanth memorial Advertisement

டெல்லியில், குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா 2-ம் கட்டமாக கடந்த மே 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பத்ம விருதுகளை வென்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதினை வழங்கி பெருமைப்படுத்தினார். 

நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கான விருதினை அவரது மனைவி பிரேமலதா நிகழ்ச்சியில் பங்கேற்று ஜனாதிபதி திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றுகொண்டார். தொடர்ந்து டெல்லி தமிழ் சங்கம் சார்பில் விஜயகாந்த் குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது; நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி.!

vijayakanth

நினைவிடத்தில் மரியாதை 

அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பியுள்ளார். பின்னர் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற அவர் அங்கு பத்ம பூஷண் விருதை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்பொழுது உடனிருந்த நடிகர் விஜயகாந்தின் மகன்களும் கண்கலங்கியுள்ளனர். 

 

 

இதையும் படிங்க: மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு கிடைத்த கவுரவம்.! குடியரசுத் தலைவரிடம் பெற்றுக் கொண்டார் பிரேமலதா!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijayakanth #Padmapoosan #Premalatha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story