×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து தூக்கிய கார்.. கர்ப்பிணி பெண் துடிதுடிக்க பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!

Chengalpattu Accident News: டூவீலர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்தார்.

Advertisement

நிறைமாத கர்ப்பிணி மோனிகா, பரிசோதனைக்கு சென்று வந்தபோது விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்ப்பிணிப்பெண்:

Chengalpattu News Today: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், மேலச்சேரி பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன். இவரின் மனைவி மோனிகா. தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது மோனிகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இன்று காலை கணவருடன் இருசக்கர வாகனத்தில் மோனிகா மருத்துவ சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: ஓடும் பேருந்தில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.. சம்பவ இடத்திலேயே சோகம்..!

டூவீலர் மீது கார் மோதி கோரம்:

பின் மீண்டும் இருவரும் தங்களின் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் நோக்கி வந்துகொண்டு இருந்தனர். அப்போது, திண்டிவனம் நோக்கி பயணம் செய்த கார் ஒன்று, தம்பதிகளின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி தறிகெட்டுச் சென்று நின்றது.

கர்ப்பிணி பெண் பலி:

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மோனிகா, உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வாசுதேவன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த சில நிமிடத்தில் இருசக்கர வாகனமும் தீப்பிடித்து எரிந்து இருக்கிறது. 

குற்றவாளி கைது:

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், விபத்து சம்பவத்தை பின்னால் வந்த காரில் இருந்த கேமிரா பதிவு செய்த நிலையில், கார் நிற்காமல் சென்றபோது, அதனை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தை ஏற்படுத்திய காரின் அடையாளத்தை பதிவு செய்தது. இதனை அடிப்படையாக கொண்டு விபத்தை ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்:

வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி

இதையும் படிங்க: கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #Chengalpattu #death #கர்ப்பிணி பெண் மரணம் #விபத்து #செங்கல்பட்டு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story