×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது! இந்த மாவட்டத்திற்கு மட்டும் பொங்கல் பரிசு கிடையாதா? தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்!

pongal gift not given in 27 district

Advertisement

தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் அடுத்த மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என தமிழக அரசு பரிசு தொகுப்பு மற்றும் பரிசு தொகையை வழங்கி வருகிறது. 

இவ்வாறு கடந்த ஆண்டு அனைத்து தமிழக மக்களுக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி உட்பட அனைத்து பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் அதனுடன் பொங்கல் பரிசு தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது. அதனை போலவே இவ்வாண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் 2 கோடி ரேசன் கார்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது. அவை வருகிற 20-ந்தேதி முதல் 25ந் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் கொடுத்து முடித்துவிட ஏற்பாடு நடந்து வருவதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் சுப்புலட்சுமி என்பவர் இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க அனுமதி வழங்கவில்லை.மேலும்  தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளித்துள்ளது. அதனை தொடர்ந்து 27 மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி கேட்டிருப்பதாக வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#election #pongal gift #government
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story