×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருடனுக்கு போலீசார் கொடுத்த மரியாதை : ஆத்திரத்தில் பொதுமக்கள்..!

Advertisement

ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து  பைக் மற்றும் நகைகள் திருடப்பட்டு வந்த நிலையில், அந்த ஊர் மக்களே திருடர்களை பிடித்துக் கொடுத்தும், காவல்துறையினர் அவர்களை கைது செய்யாதது, அப்பகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பைக் மற்றும் நகைகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெருமாள்புரத்தில், இரண்டு இளைஞர்கள் அங்கு வசித்து வரும் சந்திரகுமாரின் மோட்டார் சைக்கிளை திருடியுள்ளனர். இதை அந்த பகுதியில் உள்ள மக்கள் பார்த்ததால், அந்த இரு இளைஞர்களையும் பிடித்து அடித்து அருகிலுள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். 

பின்னர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் விடியும்வரை காவல்துறையினர், இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையம் கொண்டு செல்ல முடியாது என்றும், அவர்களை மருத்துவமனைக்கு அடுத்து சென்ற பிறகுதான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் நாகர்கோவில் திருநெல்வேலி ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரல்வாய்மொழி காவல் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் காவல்துறையினர், விரைந்து வந்து போராட்டம் நடத்திய ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இரு இளைஞர்களையும் காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருடர்களை பிடித்த பின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது, அந்த ஊர் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kanykumari District. #Aealvaymoli #Thievs #Road blocked #public people
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story