திருச்சியில் போதை பொருள் விற்பனை... 2 பெண்கள் கைது.!! காவல்துறை அதிரடி.!!
திருச்சியில் போதை பொருள் விற்பனை... 2 பெண்கள் கைது.!! காவல்துறை அதிரடி.!!
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பிரபலமான நத்தர்ஷா பள்ளிவாசல் தர்கா அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தீவிரமான சோதனையையும் நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பெண்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... அள்ள அள்ள போதை மாத்திரைகள்.!! ஒருவர் கைது.!!
மேலும் உறையூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாட்ஷா என்ற நபரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவருக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா.? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு... கட்டுகட்டாக பணம், போதை மாத்திரைகள்.!! 7 பேர் கும்பல் கைது.!!