×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மசாஜ் என்ற பெயரில் நடந்த மஜா! வட மாநில இளம் அழகிகளுடன் சென்னையில் நடந்த சம்பவம்! எங்கு தெரியுமா?

Police arrested two north Indian girl from famous massage parlor in Chennai

Advertisement

சென்னையில் வேளச்சேரி ஒன்றில் இயங்கிவரும் மசாஜ் சென்டர் ஒன்றில் வடமாநில அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற செயல்கள் அதிகம் நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியில் இயங்கிவந்த பிரபல மசாஜ் சென்டர் அருகில் வடமாநில பெண்களின் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது. மேலும், அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வருவதும், போவதுமாக இருந்ததால் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மசாஜ் சென்டரை போலீசார் மப்டியில் கண்காணித்துள்ளனர். பின்னர் அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கிருந்த சத்யா மற்றும் பிரவீன் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் 2 வட மாநில அழகிகளை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த செய்தியானது வேளச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Velachery parlour
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story