×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆளு பார்க்கத்தான் இப்படி.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! பதறவைக்கும் மதுரை சம்பவம்..

ஆளு பார்க்கத்தான் இப்படி.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! பதறவைக்கும் மதுரை சம்பவம்..

Advertisement

சினிமாவிற்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிய பெண்ணை காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கடையில் வேலைபார்க்கும் ஊழியர்களுடன் கடந்த சனிக்கிழமை இரவு செல்லூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளார்.

படம் முடிந்ததும் கடை உரிமையாளர் கடையில் பணியாற்றும் இளம் பெண் ஒருவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். அப்போது நேதாஜி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 2 போலீசார் அவர்களை வழிமறித்து, இந்த நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள் என விசாரித்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த இளம்பெண்ணை தான் பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு போய் விடுவதாக காவலர் முருகன் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை அழைத்து சென்ற அவர் மறைவான இடத்தில் வைத்து, அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் யாரிடமும் இதனை தெரிவிக்க கூடாது என்று மிரட்டி ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். 

வீட்டிற்கு சென்ற அந்த பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு பதறிப்போன அப்பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது திலகர்திடல் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரியும் முருகன் என்பதும், அவருடன் இருந்த மற்றொருவர் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்பதையும் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து காவலர் முருகனை கைதுசெய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story