×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிகாலையில் கழிவறைக்கு சென்ற தந்தை, 2 மகன்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர்..! ஒருவர் உயிரிழப்பு..! அதிர்ச்சி காரணம்.!

Poison gas attack one dead two in serious near covai

Advertisement

கழிவறைக்கு சென்ற தந்தை விஷவாயு தாக்கி மயங்கி விழுந்த நிலையில் அவரை மீட்க சென்ற மகன் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடுபகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்(72), இவரது மனைவி பத்மாவதி (70). இந்த தம்பதிக்கு பாலஜி (49), முரளி (45) என்ற இரு மகன்கள் உள்ளனர். 40 வயதை கடந்தும் மகன்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தங்கள் பெற்றோருடன் வசித்துவந்துள்ளனனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில் ஸ்ரீதர் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்ற தந்தை நீண்டநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது இளைய மகன் முரளி கழிவறை பக்கம் சென்றுள்ளார்.

முரளியும் நீண்டநேரமாகியும் திரும்ப வரவில்லை. இதனால் முதல் மகன் பாலாஜி இருவரையும் தேடி கழிவறைக்கு சென்றுள்ளார். முரளியும் நெடுநேரமாகியும் திரும்பாததால் அவர்களது தாயார் பத்மாவதி அக்கம் பக்கத்தினரை கூப்பிட்டு விவரத்தை கூறியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து கழிவறையில் மயங்கி கிடந்த மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் முதல் மகன் பாலாஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தந்தை ஸ்ரீதர் மற்றும் இளைய மகன் முரளி இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Poison gas leaked #dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story