×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 2 மனைவிகளின் கணவர் கைது.. பரபரப்பை கிளப்பிய பகீர் பிண்ணனி!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 2 மனைவிகளின் கணவர் கைது.. பரபரப்பை கிளப்பிய பகீர் பிண்ணனி!

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே போக்சோ வழக்கில், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நபர் 8 மாதங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தண்டராம்பட்டு அடுத்த செ.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (45). பந்தல் மற்றும் அலங்காரப் பணிகளை மேற்கொண்டு வரும் இவருக்கு சுதா மற்றும் நந்தினி என இரண்டு மனைவிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில், சுதாவுக்கு 3 குழந்தைகளும், நந்தினிக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் சங்கர் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் அதிர்ச்சி.. பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு தொடர் பாலியல் தொல்லை.? 

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வந்தனர். இதனிடையே போலீசார் தேடுவதை அறிந்த சங்கர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தேடப்படும் நபராக ஆன்லைன் பதிவில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு சங்கர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். அவரது விசா உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதித்தபோது, அவர் போலீசாரால் தேடப்பட்டு வரும் பாலியல் குற்றவாளி என்பது தெரியவந்தது 

இதையடுத்து விமான நிலைய போலீசார் அவரை பிடித்து, திருவண்ணாமலை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சென்னை சென்று சங்கரை கைது செய்தனர்.அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: அடப்பாவீங்களா.... வகுப்பறையில் மாணவனை நிர்வாணப்படுத்தி ரப்பர் பேண்ட், ஸ்கேலால் அடித்து மிளகாய் பொடி தூவி..... 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvannamalai #Thandarampattu #Pocso Act #harassment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story