"ரெய்டு போன இடத்தில் சிறுமியிடம் சில்மிஷம்..." போலீஸ்காரர் மீது போக்சோ வழக்கு.!!
ரெய்டு போன இடத்தில் சிறுமியிடம் சில்மிஷம்... போலீஸ்காரர் மீது போக்சோ வழக்கு.!!
விசாரணைக்கு சென்ற இடத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் தனிப்பிரிவு காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் பெட்டி கடையொன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் கடைக்கு சென்று காவலர்கள் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெட்டிக்கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்துவதற்காக காவல்துறை தனிப்பிரிவு காவலரான பிரபு(38) என்பவர் பெட்டிக்கடை உரிமையாளரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கடை உரிமையாளரின் 17 வயது மகளிடம் விசாரணை என்ற பெயரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறை கண்காணிப்பாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி விழுப்புரம் சரக டிஐஜி உமா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் காவலர் பிரபு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். விசாரணைக்கு சென்ற இடத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 17 வயது சிறுமி கர்ப்பம்.!! கல்லூரி மாணவர் கைது.!!