ராமதாஸின் முடிவால் பரிதவிக்கும் ஆதரவாளர்கள்.. விஜய்க்கு திடீர் பாராட்டு.. புலம்பல்?
Ramadoss TVK Vijay: தேர்தலின்போதே ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்திருக்க வேண்டும் என ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.
தேர்தலுக்கு முன் ராமதாஸ் எடுத்த முடிவால் தற்போது தவித்து வருவதாக ராமதாஸ் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில், சசிகலாவின் அஇபுமமுகவுடன் ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்து பல்வேறு இடங்களில் போட்டியிட்டு இருந்தது. ஆனால், தேர்தல் முடிவில் இரண்டு கட்சிகளும் டெபாசிட் இழந்தன.
மரியாதையான சந்திப்பு:
தோல்விக்குப்பின் தைலாபுரத்துக்கு ஆதரவாளர்கள் & வேட்பாளர்களை வரவழைத்த ராமதாஸ் நடத்திய ஆலோசனையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது, பலரும் தாங்கள் தேர்தலுக்கு முன் தெரிவித்த ஆலோசனையை கூறி ஆதங்கத்தை கொட்டியிருக்கின்றனர். மேலும், முதல்வராக பொறுப்பேற்ற விஜய் திமுக தலைவர் ஸ்டாலின், பாமக அன்புமணி உட்பட அனைத்து மரியாதையை நிமித்தமாக வீட்டுக்குச் சென்று சந்தித்து இருந்தார்.
இதையும் படிங்க: தவெகவுடன் கைகோர்க்கும் மதிமுக? பளிச் பதில் அளித்த வைகோ.!
நல்ல தொடக்கம்:
ஆனால், இதுவரையில் பாமக நிறுவனர் ராமதாஸை விஜய் சந்திக்கவில்லை. இதற்கான வாய்ப்புகளும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்தார். இந்த விஷயம் அரசின் நல்ல தொடக்கத்துக்கான அறிகுறி என குறிப்பிட்டார்.
குமுறல்:
தேர்தலுக்கு முன்பே ராமதாஸை தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என ஆதரவாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், அதற்கு ராமதாஸ் ஒத்துக்கொள்ளாத நிலையில், தற்போது என்ன பயன் என புலம்புகின்றனர். ஏற்கனவே ராமதாஸ் தரப்பு கட்சி குறுகி வரும் நிலையில், தேர்தல் முடிவு தொடர்ந்து ராமதாசுக்கு மிகப்பெரிய தோல்வியை அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.