×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கை, கால் ஒரு பக்கம்.... மர்ம உறுப்பு, தலை வேறு ஒரு பக்கம்! நடுவுடல் பெட்டியில்....கணவனை துண்டு துண்டாக சிதைத்த மனைவி... சிக்கிய பிட்டு துணி பார்கோட்டில் ..!!!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட உடல் தொடர்பான கொலை வழக்கில், இரண்டாவது மனைவி மற்றும் அவரது நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisement

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் தொடர்பான வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்டவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது இரண்டாவது மனைவி ரோஹிமா மற்றும் அவரது நண்பர் அஷ்ரஃப் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் கொலைக்கான காரணமும், உடலை மறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட உடல்

கடந்த ஜூன் 5-ஆம் தேதி பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நீல நிற சூட்கேஸில் கை, கால், தலை மற்றும் அந்தரங்க உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலை வழக்கு சென்னை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலின்படி, சடலத்தின் ஆடையில் இருந்த பார்கோடு, ரயில் நிலைய சிசிடிவி காட்சிகள் மற்றும் ரேபிடோ வாகனப் பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணையை முன்னெடுத்தனர். அதன் மூலம் உயிரிழந்தவர் தேனாம்பேட்டையில் தங்கி வடமாநில நோயாளிகளுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வந்த அமீர் அலி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: எங்கே தேடியும் கிடைக்காத தலை.... ஆணுறுப்பு இருந்தால் தானே இப்படி செய்வ! சூட்கேஸில் இருந்த சடலம்..... ஆக்ரோஷமாக மனைவி செய்த பயங்கரம்! பதறவைக்கும் பின்னணி..!!!

பாலில் தூக்க மாத்திரை கலந்து கொலை

விசாரணை அமீர் அலியின் குடும்பத்தை நோக்கி திரும்பியபோது முக்கிய தகவல்கள் கிடைத்தன. கைது செய்யப்பட்ட ரோஹிமா, கணவர் அமீர் அலிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், தன்னை அடிக்கடி தாக்கி துன்புறுத்தியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த அமீர் அலியை அகற்ற முடிவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூன் 2-ஆம் தேதி பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பிறகு அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது, அஷ்ரஃப் அலியின் உதவியுடன் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் பாகங்கள் வெவ்வேறு இடங்களில் வீச்சு

கொலையை மறைப்பதற்காக உடலை சமையல் கத்தியால் துண்டித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் நடுவுடலை மட்டும் சூட்கேஸில் அடைத்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீசியுள்ளனர்.

அதன்பின் வெட்டப்பட்ட தலைப்பகுதியை செங்கல்பட்டு அருகேயுள்ள கொளவாய் ஏரியில் வீசியதுடன், கை மற்றும் கால்களை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் தூக்கி எறிந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் சில தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: என்னை யாரும் தேட வேண்டாம்.... கணவனை உடலை துண்டு துண்டாக வெட்டி..... அந்த வீடியோவை பார்த்து பார்த்து ரசித்த மனைவி! பகீர் பின்னணி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Perambur Murder #பெரம்பூர் ரயில் நிலையம் #Chennai crime #அமீர் அலி #Suitcase Murder Case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story