×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#பெரம்பலூர் : காணாமல் போன 12ஆம் வகுப்பு மாணவி.. ஒருவாரத்திற்கு பின் காத்திருந்த அதிர்ச்சி.! 

#பெரம்பலூர் : காணாமல் போன 12ஆம் வகுப்பு மாணவி.. ஒருவாரத்திற்கு பின் காத்திருந்த அதிர்ச்சி.! 

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தில் காணாமல் போன 12ஆம் வகுப்பு மாணவி சுபாஷினி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுபாஷினி தனது 12ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு, முடிவுக்காக வீட்டில் காத்திருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஒரு வார காலமாக காவல்துறையினருடன் இணைந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் கிணற்றிலிருந்து சுபாஷினியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது விபத்தாக நடந்ததா, தற்கொலைச் சம்பவமா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அதிர்ச்சி! தூக்கில் தொங்கிய நிலையில் காதலன்! வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்! அழுகிய நிலையில் மகனும்,பெண்ணின் சடலமும்! போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

இந்த துயரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகமும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Perambalur #2 girl #dead body #well
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story