உபி - யில் பயங்கரம்... விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.!! இளைஞர்களுக்கு தர்ம அடி.!!
உபி - யில் பயங்கரம்... விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.!! இளைஞர்களுக்கு தர்ம அடி.!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 இளைஞர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் சிறுமிகள் கூட்டமாக சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அலறியடித்த சிறுமிகள் கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து இளைஞர்களை சுற்றி வளைத்த ஊர் மக்கள் சராமாரியாக தாக்கினர்.
மேலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்களையும் காவல்துறை வசம் ஊர் மக்கள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த நயிம் மற்றும் அசாம் ஆகியோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறை சிறையிலடைத்தது.
இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!
இதையும் படிங்க: "அடுத்தடுத்து மயங்கிய மாணவிகள்..." அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்.!! கூலி தொழிலாளிகள் கைது.!!