×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்றோர்களே கவனம்.. 4 வயது சிறுமி அடினோ வைரசுக்கு பலி.. நெல்லையில் சோகம்.!

4-Year-Old Girl Dies Adenovirus in Nellai: 4 வயதுடைய சிறுமி பாத்திமா அடினோ வைரசால் உயிரிழந்தார்.

Advertisement

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அடினோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பரிதாபமாக உயிர் பறிபோனது.

காய்ச்சல் பாதிப்பு:

Adenovirus Infection: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம், பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ரசூல். இவரின் மகள் ரிப்கா பாத்திமா (வயது 4). சிறுமிக்கு கடந்த சில வாரங்களாகவே கடுமையான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. 

இதையும் படிங்க: அடக்கடவுளே.. தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் கட்டுவிரியன் பாம்பு கடித்து பலி.. பெற்றோர்களே கவனம்.!

நிமோனியா உறுதி:

இதனையடுத்து, சிறுமி திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். மார்ச் 27ம் தேதி மருத்துவமனையில் அனுமதியான சிறுமிக்கு நடந்த சோதனையில், நிமோனியா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பரிதாப பலி:

தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக சிறுமி ரிப்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலை வழங்கி இருக்கின்றனர்.

அடினோ வைரஸ்:

அதாவது, அடினோ வைரஸ் சளி, தொடை வலி, காய்ச்சலை ஏற்படுத்த்தும் தன்மை கொண்டது. இது கிருமி வைரஸ் ஆகும். குழந்தைகளை அதிகம் தாக்கும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் தீவிரமடைந்து நுரையீரலை தாக்கும்போது நிமோனியா காய்ச்சலாக மாறும் என தெரிவித்தனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், சுயமருந்து கொடுக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tirunelveli #tamilnadu #Adenovirus Infection Nellai #Child death #திருநெல்வேலி #அடினோ வைரஸ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story