நேற்று ஊராட்சி தலைவராக வெற்றி பெற்று மகிழ்ச்சியில் இருந்த வேட்பாளர்! அதிகாலையில் திடீர் மரணம்!
Panchayt leader candidate died

தமிழக ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்றுது. நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர் மாவட்ட ஆதனூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மணிவேல் என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 163 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
மணிவேல் வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் நேற்று மாலை தனது வெற்றிக்கான சான்றிதழை அவர் பெற்றுச் சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று மணிவேலுக்கு திடீரென இரவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மணிவேல் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர், அண்ணா ஆட்சி காலத்தின்போது பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த வெங்கலம் மணி என்பவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.