×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஷம் கொடுத்த தந்தை.. ஒன்றும் அறியாத பிஞ்சு.. தாய் கண்முன் நுரைதள்ளி துடிதுடிக்க பலி..!

Palani News: 3 வயது மகனுக்கு தந்தை விஷம் கொடுத்து கொலை செய்த சோகம் பழனியில் நடந்துள்ளது.

Advertisement

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தைகள், மனைவியை கொலை செய்யலாம் என்ற கணவன் விபரீத எண்ணத்தால் 3 வயது பிஞ்சின் உயிர் பரிதாபமாக பறிபோனது.

சந்தேகம்:

Dindigul News: திண்டுக்கல் மாவட்டம், பழனி, கணபதி நகரில் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது 32). இவர் கூலித்தொழிலாளி ஆவார். பிரபாகரனின் மனைவி ரூபி (வயது 29). தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து மடிந்த நிலையில், மனைவியின் நடத்தையில் பிரபாகரனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.

கொலை திட்டம்:

இந்த விஷயம் தொடர்பாக இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுவது வாடிக்கை என கூறப்படுகிறது. இதனிடையே, நேற்றும் வழக்கம்போல தம்பதிகளுக்குள் தகராறு நடந்த நிலையில், பிரபாகரன் மதுபானம் அருந்தி இருக்கிறார். மேலும், மனைவி, மகன்களை கொலை செய்துவிடலாம் என்ற விபரீத எண்ணத்தில் இருந்துள்ளார்.

விஷம்:

அவரின் திட்டப்படி வீட்டுக்கு விஷம் வாங்கி வந்த நிலையில், மகன்களுக்கு டம்ப்ளரில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் ரியாஸ் தாய் ரூபியால் இழுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது மகனின் வாயில் பிரபாகரன் விஷம் ஊற்றி இருக்கிறார்.

குழந்தை பலி:

தந்தை கொடுக்கும் விஷத்தின் வீரியம் தெரியாமல் குடித்த குழந்தை, சம்பவ இடத்திலேயே வாயில் நுரை தள்ளி மயங்கி இருக்கிறது. மகனை மீட்ட தாய் ரூபி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பழனி நகர காவல்துறையினர், பிரபாகரனை கைது செய்தனர்.

இதையும் படிங்க: திடீர் திருப்பம்... திமுகவில் இணைந்த மதிமுகவின் 3 முக்கிய புள்ளிகள்...! அதிர்ச்சியில் வைகோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Father Son #Affair Doubt #திண்டுக்கல் பழனி #குழந்தை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story