"உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்..." திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! பெயிண்டர் அதிரடி கைது.!!
உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்... திருமண ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! பெயிண்டர் அதிரடி கைது.!!
திருச்சியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெயிண்டர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டி. 26 வயதான இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறார். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தாய் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெயிண்டர் மருதுக்கு எதிராக புகாரளித்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட மகளீர் காவல் நிலைய அதிகாரிகள் இது தொடர்பாக விரைவான விசாரணையில் இறங்கினர். காவல்துறை நடத்திய விசாரணையில் மருதுபாண்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!
இதற்கடுத்து பெயிண்டர் மருது பாண்டியை கைது செய்துள்ள காவல் துறை அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... 17 வயது சிறுமி கர்ப்பம்.!! கல்லூரி மாணவர் கைது.!!