×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? ப.சிதம்பரம் கேள்வி

பீகார் சட்டமன்ற தேர்தலில் பா ஜ கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்பவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி அங்கு அணைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அங்கு பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், பீகார் சட்டமன்ற தேர்தலில் பா ஜ கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்பவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், "2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 381 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் அல்லது இடைத்தேர்தல் நடந்தது. இவற்றில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இந்த 381 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் 319 இடங்களில் வெற்றி பெற்றார்கள். ஆனால் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 163 இடங்களில் மட்டுமே வெற்றியடைந்தார்கள். ஒரே ஆண்டில் 319 என்பது 163 ஆக குறைந்தது! பாரதிய ஜனதா கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? பா ஜ கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்பவேண்டும். இதனை பீகார் சட்ட மன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்" என தெரிவித்துள்ளார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bjp #p chidamparam
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story