BREAKING: அடுத்த ட்விஸ்ட்... தவெகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? ஆதரவாளர்களின் அதிரடி ஆலோசனை.... தமிழக அரசியலில் பரபரப்பு ..!!!
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தமிழக அரசியலில் புதிய கூட்டணி யூகங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த தகவல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆதரவாளர்களின் புதிய ஆலோசனை
திமுக கூட்டணியில் இதுவரை எதிர்பார்த்த அரசியல் முக்கியத்துவமோ, பதவியோ கிடைக்கவில்லை என்ற அதிருப்தி காரணமாக, மாற்று அரசியல் வாய்ப்புகள் குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அடுத்த சம்பவமா.... சேகர் பாபுவுடன் ரகசிய மீட்டிங் போட்ட முக்கிய புள்ளி...! செம ஷாக்கில் எடப்பாடி..!!!
ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?
எனினும், தனக்கான அரசியல் அங்கீகாரமும் உரிய பொறுப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாகக் கூறி, தற்போதைக்கு அந்த யோசனையை ஓ.பன்னீர்செல்வம் ஏற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவரது தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
ரவீந்திரநாத் குறித்து பரவும் தகவல்கள்
இதற்கிடையில், ஓபிஎஸ்ஸின் மகனான ஓ.பி. ரவீந்திரநாத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய ஆர்வமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவல்களும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் அணியின் அடுத்த அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த அந்தர் பல்டி! திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த ஓ.பி.எஸ்.... தவெக-வில் இணையப்போகிறாரா?. தேனியில் பரவும் ரகசிய தகவல்!!!