அமித்ஷாவுடன் சந்திப்பு.. தனிக்கட்சி தொடங்கும் ஓபிஎஸ்?.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி.!
தனிக்கட்சி தொடர்பான முடிவை ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடர்பாகவும், டெல்லி பயணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவின் 9 வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம் தனிக்கட்சி தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டது.
ஓபிஎஸ் விளக்கம்:
அப்போது அவரிடம் டெல்லிக்கு சென்றது தனிக்கட்சி தொடங்குவது குறித்து பேசவா? என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. தனிக்கட்சி தொடங்க இருப்பதாக நான் எங்கும் சொல்லவில்லை என தெரிவித்தார். மேலும் டெல்லிக்கு சென்றது மரியாதை நிமித்தமாக மட்டுமே என்றும், அதிமுக பிரிந்த அணிகள் மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கான வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முன்வைத்ததாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: #Breaking: அதிமுக தலைமைக்கு பேரிடி.. திமுகவுக்கு தாவிய Ex எம்எல்ஏ.. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்.!
செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதில்:
இதனை தொடர்ந்து செங்கோட்டையன் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர், தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்த பின்னர் அவருடன் எந்த வகையான உரையாடலும் நடக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: மக்கள் மனதில் 'அம்மா'.. இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 9 வது நினைவு நாள்.!