ஆனியன் ஊத்தாப்பம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராதா..? விளம்பரத்தால் எழுந்த சர்ச்சை..!
Onion uthappam control corono virus fake advertisement

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது கேரளா வரை வந்துவிட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 213 பேர் உயிர் இழந்துள்ளனர், 10000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க இந்த மருந்தை சாப்பிடுங்கள், அந்த மருந்தை சாப்பிடுங்கள் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை சித்த வைத்தியத்தால் குணப்படுத்த முடியும், நிலவேம்பு கசாயம் குடித்தால் சரியாகும் என்றும் செய்திகளை பலர் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சின்னவெங்காய ஊத்தாப்பம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராமல் தடுக்கலாம், விலை ரூ. 50 மட்டுமே என போலியாக ஒரு உணவகத்தில் விளம்பர பலகை வைக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தின் சோகத்தில் இருக்கும்போது இதுபோன்ற போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும், பல கோடி கணக்கில் செலவு செய்து இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் 50 ரூபா ஊத்தப்பம் சாப்பிட்டால் சரியாகி விடும் என கூறுவது முட்டாள்தனமானது என பலர் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர்.