×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒன் சைடு பெண்ணை மயக்க ரூட்டு போட்ட கேடி.. கேவலமான எண்ணத்தால் கம்பி எண்ணும் சோகம்.! 2கே கிட்களே உஷார்.! 

Tambaram News: பெண்ணின் நம்பிக்கையை பெற்று அவரை காதலியாக்க நினைத்தவர் கம்பி வைத்த சிறைக்குள் அடைக்கப்பட்டார்.

Advertisement

ஒருதலைகாதலியை தன்வசப்படுத்தி பிரச்சனையை தானே உருவாக்கி, பின் அதற்கு தீர்வு தரலாம் என நினைத்த இளைஞர் இறுதியில் அவனின் கேடுகெட்ட புத்திகொண்ட எண்ணத்தால் சிக்கிய சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

அதிகாரிகள் விசாரணை:

சென்னையில் உள்ள மேற்கு தாம்பரம் பகுதியில் வசித்து வரும் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் & டெலகிராமில் போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் தேவையில்லாத அழைப்புகள் தங்களை தொந்தரவு செய்கிறது என பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் தாம்பரம் மாநகர காவல் நிலைய மத்திய குற்றப்பிரிவு, இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பயங்கரம்.. 24 வயது இளைஞரின் குலைநடுங்க வைக்கும் செயல்.!

குற்றவாளி கண்டுபிடிப்பு:

இன்ஸ்டாகிராம் & டெலக்ராமில் இருந்து இதுதொடர்பான தரவுகள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பெண்ணின் ஆண் நண்பரான கரூர் மாவட்டம் குளித்தலை, தோகைமலையில் வசித்து வரும் சிவபிரகாஷ் இந்த செயலில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். இவர் தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாத்தில் தங்கி இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஷம்ஷாபாத் புறப்பட்ட தனிப்படை அதிகாரிகள் அதிரடியாக இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில் ஷாக்:

விசாரணையில், சிவபிரகாஷ் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பெண்ணின் அனுதாபம், நம்பிக்கையை பெறுவதற்காக தானே ஒரு பிரச்னையை உருவாக்கி, பின் ஆறுதல் கூறி பெண்ணை காதல் வலையில் வீழ்த்தலாம் என இன்ஸ்டாகிராமில் அவதூறாக சித்தரித்து புதிய ஐடிக்களை உருவாக்கியது அம்பலமானது. இதனையடுத்து, சிவப்ரகாஷை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
 

இதையும் படிங்க: என்னதான் நடக்குது கோவையில்.. 13 வயது சிறுவனை அடித்துக்கொன்ற நண்பர்கள்.. திடுக்கிடவைத்த வாக்குமூலம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Tambaram #Instagram Profile #ஆபாசமாக சித்தரிப்பு #காவல்துறை #டெலக்ராம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story