தமிழகத்தில் ஒருவருக்கு 'டெல்டா பிளஸ்' கொரோனா.! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்.!
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் பல நாடுகளி
உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்தவகையில் பல நாடுகளில் உருமாறிய வைரஸ் பரவல் காணப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு டெல்டா என பெயரிடப்பட்டு உள்ளது. இது பல்வேறு நாடுகளில் பரவி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது. நுரையீரல் உயிரணுக்களில் வலுவாக ஒட்டிக்கொள்ளக்கூடியது. நோய் எதிர்ப்பு மருந்துகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் அந்தப் புதிய உருமாறிய கிருமிக்கு அதிகமாக உள்ளதாக என்று அறிவியல் வல்லுநர்கள் குழு ஒன்று மத்திய அரசாங்கத்திடம் தெரிவித்து உள்ளனர்.
இதுவரையில் மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 பேர் டெல்டா பிளஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் இந்த ‘டெல்டா பிளஸ்’ என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த பெண் குணமடைந்து விட்டார். டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் நலமுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.