சீட்டு விளையாடுவதற்காக உயிரையே விடத்துணிந்த நபர்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
old man suicide attempt for cards game

தற்போது தமிழகத்தில், கிராம புறங்களில் சீட்டு விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் பொழுது போக்கிற்காக இந்த ஆட்டத்தை துவங்கியவர்கள் இதனை பணம் சமப்பதிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த சீட்டு ஆட்டத்தினால் பலர் குடும்பங்களை இழந்து நடுத்தெருவுக்கு சென்றதும் உண்டு. இந்தநிலையில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சீட்டு விளையாட்டிற்கு அடிமையானவர். இந்தநிலையில் ராமச்சந்திரன் சீட்டு ஆட்டத்திற்காக அதே ஊரை சேர்ந்த பாண்டி என்பவரிடம் வட்டிக்கு ரூபாய்12000 பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ராமச்சந்திரன் வாங்கிய பணத்திற்கு வட்டி மட்டுமே கட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணம் கொடுத்த பாண்டி, தனது மனைவியுடன் வீட்டிற்கு வந்து ராமசந்திரனையும் அவரது மனைவியையும் தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராமசந்திரன் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ராமச்சந்திரன் விஷம் குடித்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஏர்வாடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.